பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை துறை மூலம் காபிதூள், கிரீன் டீ விற்பனை: பழங்குடியினர் வருமானம் ஈட்ட நடவடிக்கை

Added : பிப் 11, 2020
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட காபி துாள், கிரீன் டீ விற்பனை துவக்கப்பட்டது.நீலகிரியில் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மேம்படும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, மகளிர் திட்டத்தின் கீழ், பழங்குடியினர் மக்கள் உற்பத்தி செய்யும் காபி துாளை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை தோட்டக்கலை துறை அலுவலகத்தில் 'பேக்'

ஊட்டி:நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட காபி துாள், கிரீன் டீ விற்பனை துவக்கப்பட்டது.நீலகிரியில் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மேம்படும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, மகளிர் திட்டத்தின் கீழ், பழங்குடியினர் மக்கள் உற்பத்தி செய்யும் காபி துாளை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை தோட்டக்கலை துறை அலுவலகத்தில் 'பேக்' செய்யும் பணி நடந்து வருகிறது.மேலும், தொட்டபெட்டா பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் பறிக்கும் முதல் 'கிரேடு' இலையை கொண்டு கிரீன் டீயும் இங்கு தயாரிக்கப்படுகிறது.காபி தூள், 200 கிராம், 130 ரூபாய்; கிரீன் டீ, 50 கிராம், 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.அதில், சென்னை தோட்டக்கலை துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் 'லேபிள்' பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை பொருட்கள், ஊட்டி, குன்னுார், காட்டேரி பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் என, சுற்றுலா பயணிகள் அதிக கூடும் இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணி சாம்ராஜ் கூறுகையில்,''மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை அடுத்து, பழங்குடியினர் உற்பத்தி செய்யும் காபியை கொள்முதல் செய்து, தரமான முறையில் பேக் செய்து விற்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை தற்போது இம்மாவட்டத்தில் மட்டும் துவக்கப்பட்டது. அடுத்த மாதத்திலிருந்து மாநில முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் வரும் வருமானம் பழங்குடியின மக்களுக்கு கொடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X