பொது செய்தி

தமிழ்நாடு

பரிசோதித்த தொழில் நுட்பங்கள்: விளைச்சலுக்கு பயன்படுத்த அறிவுரை

Added : பிப் 11, 2020
Share
Advertisement
ஊட்டி:'பரிசோதிக்கப்பட்ட தொழில் நுட்பத்தை விளைச்சலுக்கு பயன்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில்,'உயரிய பயிர் விளைச்சலுக்கு ஒருங்கிணைந்த பயிர்சத்து நிர்வாகம் மற்றும் உருப்படிவத்தின் வழியான பயிர்சத்து திட்டமிடல்' என்ற தலைப்பில், 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.இப்பயிற்சி முகாமில்,

ஊட்டி:'பரிசோதிக்கப்பட்ட தொழில் நுட்பத்தை விளைச்சலுக்கு பயன்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில்,'உயரிய பயிர் விளைச்சலுக்கு ஒருங்கிணைந்த பயிர்சத்து நிர்வாகம் மற்றும் உருப்படிவத்தின் வழியான பயிர்சத்து திட்டமிடல்' என்ற தலைப்பில், 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது.இப்பயிற்சி முகாமில், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து, 25 விஞ்ஞானிகள் பங்கேற்றனர். பயிற்சியின் நிறைவு விழா நடந்தது.ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் கண்ணன் பேசியதாவது,''நீலகிரியில் கடந்தாண்டில், ஒரே நாளில் 900 மி.மீ., அளவிற்கு மழை பெய்தது. அதில், ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து, 8 டன் அளவுக்கு மண் அடித்து செல்லப்பட்டது. தோட்டங்களில் படி மட்டம் அமைத்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டால் மட்டுமே மண் மற்றும் நீரை பாதுகாக்க முடியும்,'' என்றார்இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு முன்னாள் இயக்குனர்வேலாயுதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:விவசாயம் கற்ற கல்வியாளர்கள் ஒவ்வொருவரும், விவசாயத்தை பற்றிய விஷயங்களை, சிறு விவசாயிகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.விவசாயிகள் தாங்கள் கற்றதை சக விவசாயிகளுக்கு கற்றுத்தர வேண்டும்.ஒவ்வொரு வீட்டில் ரேஷன் அட்டை இருப்பது போல் மண்வள அட்டையும் ஒவ்வொரு விவசாயிகளின் வீடுகளிலும் இருக்க வேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் சத்து நிர்வாகத்தின் முக்கியநோக்கம் சரியான சத்து மூலப்பொருட்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் விடுவதே ஆகும். நன்கு பரிசோதிக்கப்பட்ட தொழில்நுட்பம் மட்டுமே விளைச்சலுக்கு பயன்படுத்த வேண்டும். சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட விவசாய தொழில் நுட்பங்களை விவசாயிகளின் மூலமாக ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு, வேலாயுதம் பேசினார்.பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மூத்த விஞ்ஞானி ஹோம் பே கவுடா, விஞ்ஞானி ராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரதீப் டே உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X