கூடலுார்:\கூடலுாரில், கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பராமரிப்பின்றி உள்ள தடுப்பணைகள் துார்வாரி சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார், பந்தலூர் வனப்பகுதி வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள பாண்டியாறு - புன்னம்புழா மற்றும் அதனை சார்ந்த கிளை ஆறுகள், நீரோடைகள் அவைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. வறட்சி காலத்தில் வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்துள்ளனர்.ஆனால், பல தடுப்பணைகள் பராமரிப்பின்றி, மண் நிறைந்துள்ளதால், தண்ணீர் தேங்குவது இல்லை. அப்பகுதியில் குடிநீர் கிடைக்காமல், வனவிலங்குகள் குடிநீர் தேடி குடியிருப்பை நோக்கி செல்வதால் யானை -- மனித மோதல் அதிகரித்து வருகிறது.நடப்பு ஆண்டு வறட்சி துவங்கியுள்ள நிலையில், பராமரிப்பில்லாத தடுப்பணைகளிலும் தண்ணீர் தேங்குவது இல்லை. யானைகள் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் முகாமிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், தடுப்பணைகளை முழுமையாக சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'கோடையில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாது. தண்ணீர் தேடி யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கவே, முன்னெச்சரிக்கையாக வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாததால் அவைகள், குடிநீர் தேடி குடியிருப்புகளுக்குள வரும் சூழல் உள்ளதால் மக்கள் அச்சம டைந்துள்ளனர். தடுப்பணைகளை சீரமைத்து, கோடையில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய, நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE