டில்லி அரியாசனத்தில் அமர்கிறார் அரவிந்த்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (222)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கடந்த 8 ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னணியில் இருப்பதால், தற்போதைய முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மீண்டும் முதல்வராகிறார். தொடர்ந்து, 3வது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ரிக் சாதனை படைக்கிறார்.







70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு நடந்த ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 21 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக டில்லி தலைமை தேர்தல் அலுவலர் ரன்பீர்சிங் கூறியுள்ளார்.
முறையான, அதிகாரப்பூர்வ ஓட்டுப்பதிவு சதவீதத்தை தேர்தல் அதிகாரி வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அவர் அளித்துள்ள பதிலில்; ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் இருந்ததால் காலதாமதமானது என்றும் இதில் ஏதும் உள்நோக்கம் இல்லை என்றும் சிங் கூறினார்.


பா.ஜ.,. வுக்கு நம்பிக்கை



கருத்துக்கணிப்புகள் நம்புவதற்கில்லை. இது தவறானது பா.ஜ., வெற்றி பெறும், ஆட்சியை அமைப்போம் என்று மாநில பா.ஜ., தலைவர் மனோஜ்திவாரி மற்றும் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் கூறியிருந்தார். சமீபத்தில் ஆம்ஆத்மியின் அமைச்சரவையில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய அமைச்சர் கபில்மிஸ்ரா ; கெஜ்ரிவால் தோற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களின் தீர்ப்பு பா.ஜ.,வோடு உள்ளது என தெரிவித்திருந்தார்.





காங்கிரஸ் தரப்பில் தங்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி கிட்டும் என நம்பியது. ஆனால் ஒரு தொகுதிகள் கூட வெற்றி பெற முடியவில்லை. இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பட்டாசு வேண்டாம்: கெஜ்ரிவால்



டில்லியில் மாசு பிரச்னையை கருத்தில் கொண்டு ஆம்ஆத்மி தொண்டர்கள் யாரும் வெற்றி கொண்டாட்டத்தை பட்டாசு மூலம் வெளிக்காட்ட வேண்டாம்.

Advertisement




வாசகர் கருத்து (222)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
11-பிப்-202019:45:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         ஆம் ஆத்மி கட்சி சார்பாக இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள இடங்களில் ஐந்து இஸ்லாமிய சமூக வேட்பாளர்கள் களம் கண்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்.ஆம் ஆத்மி கட்சி சார்பாக இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள இடங்களில் ஐந்து இஸ்லாமிய சமூக வேட்பாளர்கள் களம் கண்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். இனி ஜாதி மதம் என்று சங்கிகள் மதம் கொண்டு அலைய வேணாம் அவர் ஹனுமான் கோயில் போனவுடன் இவர் முஸ்லீம் எதிரி என்றனர் கரி பூசியுள்ளனர் டெல்லி மக்கள்
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN SIRUSERI - CHENNAI ,இந்தியா
11-பிப்-202019:37:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN  SIRUSERI         'தில்லி தேர்தல் வெற்றி ஆம் ஆத்மியின் வெற்றி அல்ல தில்லி மக்களின் வெற்றி. மூன்றாவது முறையாக எங்களுக்கு வெற்றியை கொடுத்த தில்லி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வெற்றியை தில்லி மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் :: இது தான் அடக்கம் என்பது சங்கிகள் கற்று கொள்ளவேண்டியது
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
11-பிப்-202019:34:48 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு டெல்லி மக்களுக்கு வாழ்த்துக்கள்... பிஜேபி இதிலிருந்து மத வெறுப்பு அரசியலை கைவிட்டால் நல்லது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X