வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 8 ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னணியில் இருப்பதால், தற்போதைய முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மீண்டும் முதல்வராகிறார். தொடர்ந்து, 3வது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ரிக் சாதனை படைக்கிறார்.

70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு நடந்த ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 21 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக டில்லி தலைமை தேர்தல் அலுவலர் ரன்பீர்சிங் கூறியுள்ளார்.
முறையான, அதிகாரப்பூர்வ ஓட்டுப்பதிவு சதவீதத்தை தேர்தல் அதிகாரி வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அவர் அளித்துள்ள பதிலில்; ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் இருந்ததால் காலதாமதமானது என்றும் இதில் ஏதும் உள்நோக்கம் இல்லை என்றும் சிங் கூறினார்.
பா.ஜ.,. வுக்கு நம்பிக்கை
கருத்துக்கணிப்புகள் நம்புவதற்கில்லை. இது தவறானது பா.ஜ., வெற்றி பெறும், ஆட்சியை அமைப்போம் என்று மாநில பா.ஜ., தலைவர் மனோஜ்திவாரி மற்றும் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் கூறியிருந்தார். சமீபத்தில் ஆம்ஆத்மியின் அமைச்சரவையில் இருந்து அதிருப்தியில் வெளியேறிய அமைச்சர் கபில்மிஸ்ரா ; கெஜ்ரிவால் தோற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களின் தீர்ப்பு பா.ஜ.,வோடு உள்ளது என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் தங்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி கிட்டும் என நம்பியது. ஆனால் ஒரு தொகுதிகள் கூட வெற்றி பெற முடியவில்லை. இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாசு வேண்டாம்: கெஜ்ரிவால்
டில்லியில் மாசு பிரச்னையை கருத்தில் கொண்டு ஆம்ஆத்மி தொண்டர்கள் யாரும் வெற்றி கொண்டாட்டத்தை பட்டாசு மூலம் வெளிக்காட்ட வேண்டாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE