சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாக்டர்கள் பற்றாக்குறை: பொதுமக்கள் போராட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement

திருச்சி: மணப்பாறை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி, மணப்பாறை அருகேயுள்ள வளநாடு கிராமத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் வளநாடு, அயன்பொருவாய், புதுப்பட்டி, ஊனையூர், கொடும்பப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை என்பதுடன், முறையான சிகிச்சையும் கிடைப்பதில்லை. இதனால் இங்கு வரும் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கோ, மணப்பாறை அல்லது துவரங்குறிச்சி மருத்துவமனைக்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பணியில் இருக்கும் டாக்டர்களும், அடிக்கடி பணிக்கு வருவதில்லை. இதனால் அங்குள்ள நர்ஸ்கள் தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஆகையால், 24 மணிநேரமும் அங்கு டாக்டர் பணியில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை, பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருங்காபுரி தாசில்தார் சாந்தி, மருத்துவ அதிகாரி ரபீக் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், தங்கள் கோரிக்கைக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் கூறிவிட்டனர். இதனால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X