சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமான மறுநாள் புதுப்பெண் திடீர் மாயம்

Added : பிப் 11, 2020
Advertisement

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் ரோஜா, 19. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கடந்த, 7ல், திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும், தம்பதி உள்ளிட்ட உறவினர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். வீட்டுக்கு வந்த ரோஜா, கடந்த, 8 மதியம், 3:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை, அக்கம் பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், ரோஜாவின் தந்தை சேகர், தூசி போலீசில் புகார் செய்தார். அதில், காஞ்சிபுரம் அடுத்த வளதொட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர், தனது மகளை அழைத்து சென்றிருக்கலாம் என கூறியிருந்தார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X