சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சல்லேகன் விரதமிருந்த 95 வயது ஜைன முதியவர் மரணம்

Added : பிப் 11, 2020
Advertisement

வந்தவாசி: வந்தவாசி அருகே, சல்லேகன் விரதமிருந்த, 95 வயது ஜைன முதியவர் மரணமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரை சேர்ந்தவர் சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; இவர், தமிழ்நாடு ஜைன சங்க முன்னாள் செயலாளர். இவரது மனைவி சரஸ்வதி இறந்து விட்டார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். சமண சமயத்தை பின்பற்றி வந்த அவர், மோட்சமடைய கடந்த மாதம் அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம் தொடங்கினார். கடந்த, 7ல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விசாகாச்சாரியார் தபோ நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு விரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அவர் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது உடல் தேங்காய் கொண்டு எரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X