சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வாலிபரின் கால் துண்டிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, ஓடும் ரயிலிலிருந்து விழுந்த வாலிபரின் கால் துண்டானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சரத்குமார், 27. இவர், சென்னையை அடுத்த திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவன அதிகாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, சரத்குமார், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை நோக்கி பயணம் செய்தார். அப்போது, அரக்கோணம் - புளியமங்கலம் இடையே சென்றபோது, சரத்குமார் திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவரது கால்கள் துண்டாகின. அவரை, அரக்கோணம் ரயில்வே போலீசார் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X