பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : பிப் 11, 2020
Advertisement

மயான பாதையை அகலப்படுத்த வேண்டும்: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில், கட்டியப்பன்புதூர், பிடாரி அம்மன் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கட்டியப்பன்புதூரிலிருந்து, மயானத்திற்கு மூன்றடி அகலத்தில் பாதை உள்ளது. அதில், சடலத்தை தூக்கி செல்ல முடியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர். மயானத்திற்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி, தார்ச்சாலை அமைக்க வேண்டும். மயானத்தில், எரிமேடை, செலவு மேடை கட்ட வேண்டும்.

- எஸ்.கோவிந்தன், குரால்நத்தம்.

வெட்டவெளியில் சடலங்களை எரிப்பு: மேட்டூர், தங்கமாபுரிபட்டணம், 16 கண் புதிய பாலம் அருகே மயானம் உள்ளது. இப்பகுதியில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வது வழக்கம். மேலும், சிலர் இறந்தவர்கள் உடலை தகனம் செய்வதற்காக, மேட்டூர் மாதையன்குட்டையில் நகராட்சி எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை, சிலர் தகனமேடைக்கு கொண்டு செல்லாமல் தங்கமாபுரிபட்டணம் மயானத்தில் வெட்டவெளியில் எரிக்கின்றனர்.

- இரா.கவின், சேலம்கேம்ப். மேட்டூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X