பொது செய்தி

தமிழ்நாடு

தென்கைலாய பக்தி பேரவை சார்பில் சேலம் வந்த ரதயாத்திரை பயணம்

Added : பிப் 11, 2020
Advertisement

சேலம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு, சென்னை தென்கைலாய பக்தி பேரவை சார்பில், ஏழாம் ஆண்டு மகாசிவன், 63 நாயன்மார்களின் விக்ரகங்களை கொண்ட தேர் ரதத்தை, சிவனடியார்கள், வெள்ளியங்கிரிக்கு ரதயாத்திரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
தென் கைலயாக பக்தி பேரவை சார்பில், மகாசிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் இருந்து, வெள்ளியங்கிரியில் நடக்கும் மகாசிவராத்திரி சிறப்பு பூஜை, கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள மகாசிவன், 63 நாயன்மார்களின் விக்ரகங்கள் தேர் ரதத்தின் மூலம், பாதயாத்திரையாக எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஜன.,29ல், சென்னை, கூடுவாஞ்சேரியில் ரத யாத்திரை புறப்பட்டது. சென்னையில் இருந்து, சேலம் வழியாக சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆங்காங்கே உள்ள வள்ளலார் மடங்களில் சிவனடியார்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு, ரத யாத்திரை நகரம் தோறும் பக்தர்களின் தரிசனத்துக்கு பின் செல்கிறது. மகாசிவராத்திரி வரும், 21ல் நடைபெற உள்ள நிலையில்,20ல் யாத்திரை வெள்ளியங்கிரியை அடைகிறது. யாத்திரையில், 44 சிவனடியார்கள் விக்ரகங்களை தலைகளில் சுமந்தும், தேர் ரதங்களில் வைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து, சிவனடியார்கள் கூறியதாவது: சென்னையில் இருந்து, வெள்ளியங்கிரிக்கு நான்கு ஆண்டுகள் விக்ரகங்களை தலைகளில் சுமந்தபடி, பாத யாத்திரையாக சென்றோம். அதன் பின், தென்கைலாய பக்தி பேரவை அமைப்பு உருவாக்கப்பட்டு, பக்தர்கள் நிதியுதவியுடன் தற்போது சிவனுக்கு மரத்தேரும், நாயன்மார்களுக்கு ரதங்களை ஏற்படுத்தி, ஊர்வலமாக எடுத்து செல்கிறோம். தேர், ரதம் பயணித்தாலும், சிவனடியார்கள் பலர் பாத யாத்திரையாகவே நடந்து செல்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X