பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : பிப் 11, 2020
Advertisement

மையம் சீரமைத்தால் விளையாடலாம்: சங்ககிரி, வடுகப்பட்டி ஊராட்சி, காஞ்சாம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, 2007ல், பஞ்., சார்பில் சமுதாய விளையாட்டு மையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஊஞ்சல், சறுக்கு பலகை உள்ளிட்டவைகளில், அமர முடியாதபடி சேதமடைந்துள்ளது. வாலிபால் விளையாட வலையின்றி, இளைஞர்கள் தவிக்கின்றனர். மையத்தை சுற்றி, செடிகள் முளைத்துள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
உடைந்த தொட்டி; மக்கள் கடும் அவதி: கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட, வேலாயுதசுவாமி கோவில் பகுதி மக்கள் பயன்படுத்த, அந்த பகுதியில் மயானம் உள்ளது. ஈம காரியங்கள் செய்ய மினி தொட்டி அமைத்து, தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தொட்டியை கடந்தாண்டு சிலர் உடைத்து விட்டனர். இதனால் ஈம காரியங்கள் செய்ய, தண்ணீரின்றி மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மயானம், கூடலூர் ஊராட்சி எல்லையில் உள்ளது. புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை எரிப்பு; ஓட்டுனர்கள் கடுப்பு: தலைவாசல் சுற்றுவட்டார குடியிருப்புகளில் இருந்து, வெளியேற்றப்படும் கழிவுகள், சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. அவற்றை தூய்மை பணியாளர்கள், அதே இடத்தில் தீயிட்டு கொழுத்துகின்றனர். இதனால், சாலை முழுவதும் புகை பரவுவதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. அப்பகுதியில் செல்வோருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதை ஏற்படுகிறது.

குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு: சங்ககிரி ஒன்றியம், தாதவராயன்குட்டை அருந்ததியர் காலனியில், அங்கன்வாடி மையம் உள்ளது. அங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மைய நுழைவு வாயிலில், கால்வாய் மீது போடப்பட்டுள்ள கான்கிரீட் தளம் உடைந்துள்ளது. இதனால், மையத்திற்கு வரும் குழந்தைகள், பள்ளம் இருப்பது தெரியாமல், தவறி சாக்கடையில் விழ வாய்ப்புள்ளது. இது குறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மக்கள் புகார் அளித்தும் பலனில்லை.

சாலையில் வழிந்து வீணாகும் குடிநீர்: ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா அருகே, கூட்டு குடிநீர் திட்டத்தின் ராட்சத குழாயில், இரண்டு மாதத்துக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வழிந்து ஓடும் குடிநீரால் சாலை அரிக்கப்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பாதசாரிகள் மீது தண்ணீர் தெறிக்கிறது. மேலும், சேறும் சகதியுமான இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X