பொது செய்தி

தமிழ்நாடு

இடைப்பாடியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

Added : பிப் 11, 2020
Advertisement

இடைப்பாடி: இடைப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள், பழநிமலைக்கு பாதயாத்திரை சென்றனர். பல குழுக்களாக செல்லும் பக்தர்களின் ஒரு பிரிவான புளியம்பட்டி, சித்தூர், ஆடையூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், நேற்று முதல் நடை பயணத்தை தொடங்கினர். 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஒட்டப்பட்டியை சேர்ந்த பரமானந்தசுவாமிகள் தலைமையில், பழநிமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். அனைவரும் உணவு சமைத்து செல்கின்றனர். இதற்காக, 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் உணவு பொருட்களும், பாத்திரங்களையும் எடுத்து செல்கின்றனர். சித்தூர், ஆடையூர், பக்கநாடு, புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில், ஓரிருவரை தவிர மற்ற எல்லோரும் பாதயாத்திரை செல்கின்றனர். நேற்று பழநிக்கு புறப்பட்ட பக்தர்கள் வரும், 15ல் பழநி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்த பின்னர், அங்கிருந்து நடைபயணமாகவே இடைப்பாடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X