பொது செய்தி

தமிழ்நாடு

எங்களுக்கும் அலுவலகம் வேண்டும்: கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

Added : பிப் 11, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: ஊராட்சி தலைவர்களுக்கு அலுவலகம் உள்ளதை போல், எங்களுக்கும் வார்டில் தனி அலுவலகம் வேண்டும் என, ஒன்றிய கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், நேற்று காலை, 11:00 மணிக்கு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. 10:30 மணி முதல், 12:00 மணி வரை எமகண்டம் என்பதால், 11:00 மணிக்கு கூட்டம் துவங்கவில்லை. மதியம், 12:10 மணிக்கு, சேர்மன் ஜெகநாதன் (அ.தி.மு.க) தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் துவங்கியது. துணை சேர்மேன் குமார் (தி.மு.க) பேசுகையில், ''ஊராட்சியில், கிராம சபை கூட்டத்திற்கு கவுன்சிலர்களுக்கு அழைப்பில்லை. ஊராட்சி தலைவர்களுக்கு அலுவலகம் உள்ளதை போல், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வார்டில், அலுவலகம் வேண்டும்,'' என்றார்.


கவுன்சிலர்கள் மோகன் (கம்யூ.,), ராஜேஸ்வரி (பா.ம.க.,), வசந்தி (தி.மு.க.,), பிரியா (தி.மு.க.,), ஆகியோர், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி பேசினர். ஆணையாளர் ராஜா, பி.டி.ஓ.,மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, ஊராட்சி செயலர்கள் சார்பில், புதிதாக பொறுப்பேற்ற சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஒன்றிய கவுன்சிலர்களுக்கு, தனியாக அலுவலகம் வேண்டும் என்பது குறித்து, அரசுதான் முடிவெடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X