பொது செய்தி

தமிழ்நாடு

நோயாளிகளிடம் பணம் பறித்த 2 பேர் 'டிஸ்மிஸ்'

Added : பிப் 11, 2020
Advertisement

சேலம்: சேலம், அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தன்னிச்சையாக குளுக்கோஸ் போட்டு, பணம் பறித்த தனியார் ஊழியர்கள் இருவர், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
சேலம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், துப்புரவு மற்றும் காவல் பணிகளை ஒப்பந்த முறையில், பத்மாவதி ஆஸ்பிடல் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதற்காக, தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களை நியமித்து, அந்நிறுவனம் வேலை வாங்கி வருகிறது. அவர்கள், ஒதுக்கப்பட்ட பணிக்கு மாறாக, நோயாளிகளை வீல்சேரில் அழைத்து செல்லுதல், உள் நோயாளிகளுக்கு தினமும் மாத்திரை, மருந்து வாங்கி வருதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். அதனால், மருத்துவமனை பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் இடையே, அடிக்கடி 'லடாய்' ஏற்படுகிறது. தனியார் ஊழியர்கள் சிலர், குறிப்பிட்ட வார்டுகளில், தொடர்ந்து பணியாற்றி, தினசரி வருமானம் பார்ப்பதை, நிர்வாகம் கண்டுகொள்வதில்லையென, மருத்துவமனை பணியாளர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தனியார் ஊழியர்கள் இருவர், மருத்துவமனையில் டாக்டரின் பரிந்துரை, அனுமதியின்றி ஆண் நோயாளி ஒருவருக்கு, குளுக்கோஸ் ஏற்றி பணம் பறிக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் ஆப்பில், வைரலாக பரவி வருகிறது. மேலும், பொது மருத்துவப்பிரிவு, நான்காவது மாடியில் உள்ள வார்டில், நோயாளிக்கு தனியார் ஊழியர் குளுக்கோஸ் ட்ரிப்ஸ் போட்டு, 200 ரூபாய் பறிப்பது கடந்த, 9ல், நடந்துள்ளது என்ற ஆடியோ பேச்சும் தெளிவாக உள்ளது. இது, டீன், கண்காணிப்பாளர் உள்பட மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் எதிரொலியாக நடந்த விசாரணையில், தனியார் ஊழியர்கள், நான்காண்டாக பணியாற்றும் பனமரத்துப்பட்டி அடுத்த குரால்நத்தம் மோகன்ராஜ், 27, மூன்றாண்டாக பணியாற்றும் குகை நடராஜ், 34, என தெரியவந்தது. இருவரையும் டிஸ்மிஸ் செய்து, ஒப்பந்த நிறுவன மண்டல மேலாளர் பாலசுப்ரமணியம், நேற்று உத்தரவிட்டார். மேலாளர் கவுசிக் கூறுகையில், 'வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்ததால், டிஸ்மிஸ் செய்துள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X