பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டடத்தை முழுமையாக சீரமைக்க பா.ம.க., வலியுறுத்தல்

Added : பிப் 11, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, வாழக்குட்டப்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள, அரசு தொடக்கப்பள்ளியின் மேற்கூரை சேதமடைந்தது. ஓடுகள் வகுப்பறைக்குள் உடைந்து விழுந்ததால், அங்கிருந்த மாணவர்கள், நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர். உள்ளாட்சி தேர்தலுக்கு, ஓட்டுச்சாவடி அமைக்க, தொடக்கப்பள்ளி கட்டடம் சீரமைக்கப்பட்டது. தேர்தலுக்கு பின், பழைய ஓட்டு கட்டடத்தில் மீண்டும் மாணவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். நேற்று, ஒன்றிய அலுவலகத்தில், கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. அதில், வாழக்குட்டப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி கட்டடம், 49 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட செலவினம் குறித்து வாசிக்கப்பட்டது. அந்த வார்டு, பா.ம.க., கவுன்சிலர் ராஜேஸ்வரி, அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை முழுமையாக சரி செய்யப்படவில்லை. ஓடுகள் வகுப்பறைக்குள் விழும் நிலையிலுள்ளது என, போட்டோவை காட்டி புகார் எழுப்பினார்.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: தேர்தலுக்காக, அவசரமாக மேற்கூரை ஓடுகள் மாற்றப்பட்டு, பேன், மின் விளக்கு, மின்ஒயர்கள் பொருத்தப்பட்டன. பள்ளியை முழுமையாக சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X