பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் கடன் அட்டை: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

சேலம்: சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரி விவசாயி கவுரவநிதி திட்டத்தில், பயன்பெறும் விவசாயிகள் மற்றும் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் உழவர் கடன் அட்டை பெறலாம். அதற்கான பிரசாரம் கடந்த, 8 ல், துவங்கி விட்டதால், 15 நாட்களில் பெரும்பாலான விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டு விடும். சேமிப்பு கணக்கு வைத்துள்ள கிளை வங்கியை நேரில் அணுகி, உழவர் கடன் பெற்று, மானிய சலுகையுடன் வங்கிக்கடன் பெறலாம். ஏற்கனவே, உழவர் கடன் அட்டை வைத்திருந்தால், கடன் தொகை வரம்பை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயலிழந்த உழவர் அட்டையை, செயல்படுத்தவும், புதிய கடன் வரம்புக்கு அனுமதியும் பெறலாம். உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள், நில ஆவணம், அடங்கலுடன், புதிய கடன் அட்டை பெற வங்கி கிளையை அணுகலாம். கால்நடை, மீன் பிடிப்புக்கான பராமரிப்பு செலவுக்கான கடன் தொகையை வரம்பில் சேர்க்கவும் அணுகலாம். இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு, இணையதளம் மூலம், குறுஞ்செய்தி அனுப்பப்படும். விவசாய பயனாளிகள், ஒருபக்க படிவத்தில், நிலம், பயிர் விபரங்கள், வேறு எந்த கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதி பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும். பொதுசேவை மூலமாகவும், விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X