சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாரமங்கலத்தில் இரு தரப்பினரிடையே கல்வீச்சு

Added : பிப் 11, 2020
Advertisement

ஓமலூர்: தேரோட்டம் நிறைவு விழாவில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தது. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில், சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, தேரோட்ட திருவிழா கடந்த, 8ல், துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் தேரோட்டம், நேற்று இரவுடன் நிறைவு பெற்றது. பின், சுவாமியை கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. அப்போது, தேரோட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், தாரமங்கலம் ஒன்பதாவது வார்டை சேர்ந்த யோகேஸ்வரன், 24, என்ற இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் அவரை சிலர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, யோகேஸ்வரனுக்கு ஆதரவாக திரண்ட இளைஞர்கள், தாக்கியவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கூறி, சுவாமியை கோவிலுக்குள் கொண்டு செல்ல விடாமல் நிறுத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் கல்வீச்சில் ஈடுபட்டனர். சோடா, கலர் பாட்டில்கள், சாலையோரத்தில் கிடந்த கற்களை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் வீசியதால் பொதுமக்கள், பக்தர்கள், கோவில் ஊழியர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், தேர் நிலை நின்ற இடத்தில் போர்க்களம் போல் காணப்பட்டது. ஓமலூர் டி.எஸ்.பி.,பாஸ்கரன் தலைமையில் வந்த போலீசார், கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், கைலாசநாதர் சிலையை, ஊழியர்கள் கோவிலுக்குள் கொண்டு சென்றனர். கல்வீச்சு சம்பவம் நடந்ததையடுத்து, தாரமங்கலத்தில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X