சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் வைத்து மகன் கொலை? கலெக்டரிடம் விவசாயி புகார்

Added : பிப் 11, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த சிக்கனம்பட்டி காட்டு வளையை சேர்ந்த விவசாயி பழனிசாமி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில் அவர், கூறியிருப்பதாவது: எனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கரில், ஒன்றரை ஏக்கர் நிலம், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி, 70, என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பின், குத்தகையை ரத்து செய்து, ஒரு ஏக்கர் நிலம், அவருக்கு கிரய ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். அதற்கு உடன்படாத, ஊமையான எனது மாற்றுத்திறனாளி மகன் சந்தோஷ், 22, அதில் கையெழுத்து போடவில்லை. அதனால், குப்புசாமி, குரோதத்தை வளர்த்து கொண்டார். சமீபத்தில், நான் பெங்களூரு சென்று திரும்பிய அன்று, சந்தோஷ் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த, 3ல், சேலம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்று மாலை, 6:25 மணியளவில் இறந்துவிட்டார். இந்நிலையில், குப்புசாமி தலைமறைவாக உள்ளதால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து, ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X