சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி: தம்பதியர் தீக்குளிக்க முயற்சி

Added : பிப் 11, 2020
Advertisement

சேலம்: கந்துவட்டி நெருக்கடியை சமாளிக்க முடியாத தம்பதியர், நேற்று தீக்குளிக்க முயன்றனர்.
சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தாப்பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன், 47. இவரது மனைவி சரஸ்வதி, 35. இருவரும், நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்த போது, திடீரென தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டனர்.

புகார் மனுவில், கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: சொந்தமாக டிராவல்ஸ் மற்றும் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்தேன். நஷ்டம் காரணமாக, டிராவல்ஸ் வாகனங்களை அடகு வைத்து, பணம் வாங்கி, கந்துவட்டி செலுத்தி வந்தேன். தற்போது, வருமானத்துக்காக, லாரி ஓட்டி வரும் நிலையில், கந்துவட்டி கொடுக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், வட்டிகேட்டு, நெருக்கடி கொடுக்கின்றனர். குறிப்பாக, சேலத்தை சேர்ந்த இப்ராஹிம், பாலாஜி, விஜய் உள்ளிட்ட சிலர், குடும்பத்தாரை மிரட்டி அச்சுறுத்துகின்றனர். அதனால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து, கடனை திருப்பி செலுத்த, உரிய கால அவகாசம் பெற்று தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X