சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் புகுந்து பெண்ணிடம் 10 பவுன், ரூ.50 ஆயிரம் கொள்ளை

Added : பிப் 11, 2020
Advertisement

சங்ககிரி: சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, கள்ளுக்கடை பஸ் ஸ்டாப்பை சேர்ந்தவர் செங்கோடன் மனைவி கண்ணம்மாள், 61. இவர், அதே பகுதியில் சப்தகிரி ஏஜென்சீஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருக்கு சுரேஷ்பாபு, 40, என்ற மகன், அனுராதா, 35, என்ற மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, மகன் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிகிறார். மகள் சேலத்தில் உள்ளார். செங்கோடன் இறந்து விட்டதால், கண்ணம்மாள் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கண்ணம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து, கண்ணம்மாவின் கழுத்தில் ஒருவர் கத்தியை வைத்து, வீட்டில் உள்ள நகை, பணத்தை கொடுத்து விடு; இல்லையெனில் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார். மற்றொருவர், பீரோவில் இருந்த ஆறு பவுன் தங்க செயின், இரண்டு பவுன் மோதிரம், இரண்டு பவுன் தோடு, 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டார். பின்னர், சேலையால், கண்ணம்மாவின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு, சாம்சங் மொபைலையும் எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு வெளியே தாழிட்டு, மர்ம நபர்கள் தப்பினர். பயத்தில் இருந்த கண்ணம்மாள், மெதுவாக கை, கால்களில் கட்டியிருந்து துணியை அவிழ்த்து, காலை, 5:00 மணிக்கு கதவை திறக்க முடியாததால், ஜன்னல் வழியாக கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள், சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரை மீட்டனர்.* சங்ககிரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும், தனியார் நூற்பாலை டிசைனர் மாரிமுத்து, 44, வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் ஐந்து பவுன் தங்க செயினை திருடிச் சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X