சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் - மொபட் மோதல்: சிறுமி உட்பட இருவர் பலி

Added : பிப் 11, 2020
Advertisement

ஆத்தூர்: தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி, 37. இவர், நேற்று முன்தினம் மாலை, வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டத்தில் உள்ள மாமனார் ராஜேந்திரன் வீட்டிற்கு, 'ஸ்கூட்டி'யில் வந்துள்ளார். தனது மகள் சவுமியா, 13, மூன்று வயது மகள் தாரணி ஆகியோரை, பைக்கில் ஏற்றிக்கொண்டு வேப்பிலைப்பட்டி சாலையில் சென்றார். அதேபோல், மேட்டுப்பட்டி, பெருமாபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் சுரேஷ், 22, அவரது நண்பர்கள் வசந்தகுமார், 18, ரவி, 21, உள்பட நான்கு பேர், 'ஹூரோ' பைக்கில், வெள்ளாளகுண்டம் நோக்கி வந்துள்ளனர். அரச மரம் பஸ் ஸ்டாப்பில் பைக், மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சவுமியா, 13, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சுரேஷ், 22, வாழப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடன் வந்த வசந்தகுமார், ரவி உள்பட மூவர் மற்றும் துரைசாமி, மகள் தாரணி ஆகிய ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X