பர்கூர் மலைவாழ் மக்களுக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பர்கூர் மலைவாழ் மக்களுக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

Added : பிப் 11, 2020
Share

அந்தியூர்: பர்கூர் மலைவாழ் மக்களுக்கு, கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. பர்கூர் மலைப்பகுதியில், 32 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் உள்ளது. மருத்துவ வசதி என்பது மலைவாழ் மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. அவசர மருத்துவ சிகிச்சை தேவை என்றால், பர்கூரில் உள்ள ஒரு சிறிய ரக 108 ஆம்புலன்ஸில் சம்பவ இடத்துக்கு சென்று, நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலையே உள்ளது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அதே ஆம்புலன்ஸில் அந்தியூர் அல்லது ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவசர சிகிச்சைக்காக அந்தியூர் சென்றால், மீண்டும் பர்கூர் செல்ல மூன்று மணி நேரமாகிறது. இடைப்பட்ட நேரங்களில் கர்ப்பிணிகள், நோயாளிகளை அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூடுதல் அவசர ஆம்புலன்ஸ் சேவை, அந்தியூரில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X