பொது செய்தி

தமிழ்நாடு

2ம் நிலை காவலர் தேர்வில் வெற்றி: 93 பேருக்கு மருத்துவ பரிசோதனை

Added : பிப் 11, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்ற, 93 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2019ல் இரண்டாம் நிலை காவலருக்கான (காவல், தீயணைப்பு, சிறைத்துறை) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 4,617 பேர் விண்ணப்பித்தனர். தேர்வில், ?,389 பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி திறன் தேர்வு கோவையில் நடந்தது. எழுத்து தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வில் இரண்டிலும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 93 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், 93 பேரிடமும் போலீஸ் விசாரணை, பட்டியல் சரிபார்ப்பு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு அரசு மருத்துவமனையில், முழு உடல் மருத்துவ பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து எஸ்.பி., சக்தி கணேசன் கூறியதாவது: போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, குற்ற வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து, விசாரணை மற்றும் கைரேகை பதிவு, இன்று (நேற்று) நடந்தது. முதற்கட்டமாக, 20 பேருக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில், முழு உடல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக நாளை (இன்று) மீதி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X