திட்டப்பணிக்கு தோண்டிய குழியால் நான்கு நாட்களாக வீணாகும் குடிநீர்

Added : பிப் 11, 2020
Advertisement

ஈரோடு: குடிநீர் திட்டத்துக்கு, குழி தோண்டியபோது குழாய் உடைந்து, நான்கு நாட்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிறது. ஈரோடு மாநகராட்சி, 34வது வார்டு உதயம் நகரில், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்துக்கு, குழாய் பதிக்க, நான்கு நாட்களுக்கு முன் குழி தோண்டினர். பணி முடிந்தவுடன் குழியை மூடிச் சென்றனர். குழி தோண்டியபோது, மாநகராட்சி குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யாமல் விட்டதால், நான்கு நாட்களாக குடிநீர் வீணாக செல்கிறது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கடந்த நான்கு நாளாக, 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பல லட்சம் லிட்டர் வீணாகியுள்ளது. மாநகராட்சி ஊழியர்களுக்கு தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிறது. மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X