டில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (33+ 223)
Advertisement
DelhiResults,Delhi, AAP, BJP, பாஜ.,காங்,

புதுடில்லி: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த பா.ஜ.,வுக்கு கடந்த முறையை விட கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளதே ஆறுதல். அதேநேரத்தில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்ற நிலையே நிலவுகிறது.

காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் ஆம்ஆத்மியே முன்னிலை பெற்று வருகிறது. பல்வேறு கருத்துக்கணிப்புகள் சொன்னது போல் கெஜ்ரிவாலே மீண்டும் ஆட்சியில் 3 வது முறை அமர உள்ளார். இந்த வெற்றி செய்தி வரத்துவங்கியதும் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் , மற்றும் தொண்டர்கள் குவியத்துவங்கி உள்ளனர். பல இடங்களில் தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 8 ம் தேதி டில்லிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. யார் ஆட்சியை பிடிப்பார்கள் என் கேள்விக்கு மத்தியில் ரிசல்ட் ஆம்ஆத்மிக்கு சாதமாகவே உள்ளது. ஆட்சியில் அமர 36 தொகுதிகள் போதுமானது. ஆனால் இந்த கட்சி தற்போது 62 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் ஏறக்குறைய ஆம்ஆத்மி ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.


காங்கிரசுக்கு பூஜ்யம் ?

டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஆம்ஆத்மியே முன்னிலை வகிக்கிறது. பா.ஜ., இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெறுமா என்பதில் சந்தேகமே!


சட்டசபை கலைப்பு

இதனிடையே, டில்லி சட்டசபையை கலைத்து கவர்னர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33+ 223)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-202020:45:42 IST Report Abuse
Tamilan இந்திய அரசியல் சட்டமும் அதன் முறைகளும் நாட்டில் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக இருக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-202018:12:14 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K டெல்லி மக்கள் புறக்கணிக்க வில்லை . கெஜ்ரிதரு ஏகப்பட்ட இலவசங்களை தருகிறேன் என்று சொல்லியதால் மக்கள் ஏமாந்து பொய் வோட்டு போட்டு விட்டனர் . அவ்வளவு தான். மேலும் காங்கிரஸின் வீழ்ச்சி கெஜ்ரிக்கு சாதகமாக மாறி விட்டது . மேலும் மோடியை கண்மூடித்தனமாக எதிர்க்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் ஓட்டும் ஒரு காரணம் . இன்னொன்று, மோடியை விட்டுக்கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு கொடுத்த கெஜ்ரியின் நேர்மையான பதிலடி டெல்லி மக்களை கவர்ந்து விட்டது . மொத்தத்தில் , டெல்லி மக்கள், "மத்தியில் பாஜகவுக்கும், மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கும் ஆதரவு" தருகிறார்கள் என்பது புரிகிறது . அதே நேரத்தில் மோடியை போன்றே கெஜ்ரியும் ஊழலற்ற ஆட்சியை கொடுக்கிறார் என்கிற எண்ணம் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது . இதனால் , பாஜகவின் திட்டத்தில் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை . அடுத்த சீர்திருத்த அதிரடிகள் செய்யதான் போகிறார்கள் . பாஜக மற்ற சுயநல கட்சிகளை போல் வேலை செய்யாமல் ஆட்சியே போனாலும் பொது நலம் தான் முக்கியம் என்று செயல்படும் கட்சி. வாழ்க மோடி ! வாழ்க பாஜக!
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
11-பிப்-202017:58:27 IST Report Abuse
Babu இலவசம், இலவசம்னு நிதியை தீத்திட்டா அப்புறம் வருங்கால மந்திரிகள் எல்லாம் எதை கொள்ளையடிச்சு கோடீஸ்வரனாகிறது. மல்லையாக்களுக்கு எப்படி கடன் தள்ளுபடி பண்ணுவது. இவ்வளவு காலமா மந்திரிங்க சம்பளத்த நம்பி மட்டும் ஆட்சிக்கு வந்ததினால பாருங்க நாட்டோட கடன் எவ்வளவு குறைஞ்சிருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X