பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : பிப் 11, 2020
Advertisement

விளையாட்டு உபகரணம் சேதம்: கும்மனூர் கூட்ரோடு அருகேயுள்ள மைதானத்தில் கடந்த, 2012ல் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. இதில், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் சிறுவர்கள் விளையாடி வந்தனர். நாளடைவில் இதை பராமரிக்காததால், கடந்த ஆறு ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட முடியாமல் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, விளையாட்டு உபகரணங்களை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
குரங்கு தொல்லை; மக்கள் பாதிப்பு: தொப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது, பளையம்புதூர் சமத்துவபுரம். வனத்தில், போதிய உணவு, குடிநீர் கிடைக்காததால், இங்கிருந்து குரங்குகள் அருகில் உள்ள சமத்துவபுரத்துக்கு வருகின்றன. இவ்வாறு வரும் குரங்குகள், இங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதுடன், விரட்டுபவர்களை கடிக்க வருவதால், இப்பகுதியினர் அச்சமடைகின்றனர். இதை தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி: பருவதனஹள்ளி பஞ்.,த்தில் கடந்த, 2014 - 2015ல், புதிய ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளில் அமைத்த சிறுமின் விசை பம்புகள், போதிய பராமரிப்பு இன்றி பழுதாகியுள்ளது. இதை சீரமைக்க, பென்னாகரம் யூனியன் நிர்வாகம் ஆர்வம் காட்டாமல் உள்ளதால், பல குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாகவே உள்ளது. இதை தடுக்க புதிய மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X