பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்

Added : பிப் 11, 2020
Advertisement

அரூர்: அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், 10 ஆயிரத்து, 500 மூட்டைகள், இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று, பருத்தி ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 1,640 விவசாயிகள், 10 ஆயிரத்து, 500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், டி.சி.எச்., ரகம் குவிண்டால், 6,890 முதல், 7,356 ரூபாய் வரையும், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 5,107 முதல், 5,609 ரூபாய் வரை விற்பனையானது. 10 ஆயிரத்து, 500 பருத்தி மூட்டைகள் மொத்தம், இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X