சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி

Added : பிப் 11, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் தீக்குளிக்க முயன்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாகல்பட்டி காலனியை சேர்ந்தவர் சித்தன், 47; கூலித்தொழிலாளி; இவர், தனது மனைவி ஆண்டிச்சி, 43, மாமியார் சித்தம்மா, 55, உட்பட குடும்பத்தினர், 11 பேருடன், நேற்று காலை புகார் மனு அளிக்க, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வந்தார். திடீரென, கலெக்டர் அலுவலக வளாகத்தில், சித்தன், ஆண்டிச்சி, சித்தம்மா ஆகியோர், தங்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். பின் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், தங்கள் குடும்பத்தினர் மீது, சிலர் கொடுத்த பொய் புகாரின்படி, குடும்ப உறுப்பினர்களை, தொப்பூர் போலீசார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால், ஊரில் தலைகாட்ட முடியாமல் அவமானமாகவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையும் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போலீசாருக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் மூவர் உட்பட அவர்களது குடும்பத்தார், 11 பேரையும், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X