சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி கொலை வழக்கில் தலைமறைவான இருவர் கைது

Added : பிப் 11, 2020
Share
Advertisement

பாலக்கோடு: விவசாயி சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். பாலக்கோடு அடுத்த உலகனஹள்ளியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 39. இவர், கடந்தாண்டு அக்.,9 இரவு, தனது, கள்ளக்காதலி ராதா, 30 என்பவருடன், தனது விவசாய நிலத்தில் இருந்துள்ளார். அப்போது காட்டுப்பன்றியை வேட்டையாட வந்த அய்யர் கொட்டாயை சேர்ந்த சண்முகம், 49, வீரன் கொட்டாயை சேர்ந்த சின்னசாமி, 30 ஆகியோர் சுட்டதில், குண்டடி பட்டு, ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிர்ச்சியடைந்த சண்முகம், சின்னசாமியுடன், ராதாவும் சேர்ந்து, ஆறுமுகத்தின் உடலை அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசினர். இதுகுறித்து தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு மாரண்டஹள்ளி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த, ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருந்த, சண்முகம், சின்னசாமியை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X