பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : பிப் 11, 2020
Share
Advertisement

சேதமான சாலை; மக்கள் அவதி: சூளகிரி அடுத்த உல்லட்டியில் இருந்து பி.கொத்தப்பள்ளி செல்லும் தார்ச்சாலையில், ஆங்காங்கே உள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில இடங்களில் தார்ச்சாலையில் அரிப்பு ஏற்பட்டு மண் ரோடாக உள்ளது. 2 கி.மீ., தூரத்துக்கு சாலை மோசமாக இருப்பதால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையின் நிலை தெரியாமல், நிலைதடுமாறி, விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மோசமான நிலையில் உள்ள, தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.
சரக்கு வாகனத்தில் செல்லும் மக்கள்: கிருஷ்ணகிரியை சுற்றி நான்கு பக்கமும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதனால் இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்று எச்சரித்தும் ஆட்களை ஏற்றிச்செல்வது குறையவில்லை. இதனால், சரக்கு வாகனங்கள், விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எனவே, இது குறித்து போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X