பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Added : பிப் 11, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கலாம் என, பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2020ம் ஆண்டிற்கான, 21வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரும், மார்ச் 6 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு விண்ணப்பத்தின் விலை, நூறு ரூபாயாகும். விண்ணப்பங்களை மார்ச், 6க்குள் பூர்த்தி செய்து, சமர்பிக்க வேண்டும். இதற்கான பயிற்சி வகுப்புகள் வரும், மார்ச் 12ல் துவங்குகிறது. பயிற்சியில் சேர, பழைய பிளஸ் 1 அல்லது புதிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் நபர், தமிழகத்தில் ஏதேனும் ஒரு கூட்டுறவு சங்கம், நிறுவனம் அல்லது வங்கி பணியில் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பணி நியமன உத்தரவின் நகல், பணிச்சான்று, பயிற்சியில் சேர்வதற்குரிய, தீர்மானம் உண்மை நகல்கள், பள்ளி தேர்ச்சி சான்றிதழ் உண்மை நகல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் உண்மை நகல் சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04343 265652 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X