1,000 குப்பை பேரல் வாங்க ரூ.15 லட்சத்திற்கு அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,000 குப்பை பேரல் வாங்க ரூ.15 லட்சத்திற்கு அனுமதி

Added : பிப் 11, 2020
Share

கிருஷ்ணகிரி: நகராட்சிக்கு, ஆயிரம் குப்பை சேகரிப்பு பேரல்களை வாங்க, 15 லட்சத்துக்கான அனுமதியை, எம்.எல்.ஏ., செங்குட்டுவன் நகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளிலும், எம்.எல்.ஏ., செங்குட்டுவன் கடந்த சில நாட்களுக்கு முன், ஒவ்வொரு வார்டாக நேரில் சென்று, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களிடம் மனு பெற்றார். அதில், நகராட்சி பகுதிகளில் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும், மட்கும் குப்பை, மட்காத குப்பை என, பிரித்து சேமிக்க தொட்டிகள் வைக்க வேண்டும்; கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருப்பது; தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பது, என்பன உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இதன்படி, நகராட்சி ஆணையாளர் சந்திராவை நேரில் சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர், ''மட்கும், மட்காத குப்பை என பிரித்து, குப்பையை சேமிக்க கைவசம் தொட்டிகள் இல்லை. அதனால் தான், குப்பை சேகரிப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது,'' என தெரிவித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 1,000 குப்பை சேகரிப்பு பேரல்களை வாங்குவற்கான அனுமதியை வழங்கினார். உடனடியாக, பேரல்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும் என, நகராட்சி ஆணையர் உறுதியளித்தார். இந்த சந்திப்பில், நகர தி.மு.க., செயலாளர் நவாப் உடனிருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X