பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: பணி நிரந்தரம், சம்பள உயர்வு கேட்டு, தனியார் நிறுவன ஊழியர்கள், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இயங்கி வரும் 'லூமினாஸ் பேட்டரி' நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், நேற்று குடும்பத்துடன், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சூளகிரியில் இயங்கி வரும் 'லூமினாஸ் பேட்டரி' நிறுவனத்தில், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டி, சங்கம் துவங்கினோம். நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று பேரை, பணியிடை நீக்கமும், மூன்று பேரை பணிநீக்கமும் செய்தது. மாத ஊதியமாக, 7,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதை வைத்து, வாழ்க்கை நடத்த முடியவில்லை. பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். ரசாயனங்களை கையாள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள், 200 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, நாங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரண்டு பேரை பணியில் சேர்க்கவும், மற்றவர்களை விரைவில் சேர்க்கவும், இது குறித்து நிர்வாகத்துடன் வரும், 13ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X