பொது செய்தி

தமிழ்நாடு

ஜவளகிரி வனப்பகுதி நோக்கி சாலையை கடந்த யானைகள் கூட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த, 10க்கும் மேற்பட்ட யானைகள், அஞ்செட்டி சாலையை கடந்து, ஜவளகிரி வனப்பகுதி நோக்கி இடம் பெயர்ந்தன.
கர்நாடகா மாநில வனப்பகுதியிலிருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரக பகுதி வழியாக, 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. இதில், 30 முதல், 40க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. நேற்று காலை, 11:30 மணிக்கு, 10க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை அடுத்த மரகட்டா கிராமம் அருகே, அஞ்செட்டி சாலையை கடந்து, ஜவளகிரி வனச்சரக பகுதி நோக்கி இடம் பெயர்ந்தன. யானைகள் சாலையை கடந்ததால், சாலையின் இருபுறமும் வாகன போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. நொகனூர் காப்புக்காட்டில், தற்போது முகாமிட்டுள்ள யானைகளை, ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு விரட்டும் பணியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடப்பெயர்வு யானைகளால், தொடர்ந்து விவசாய பயிர்கள் நாசமாகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X