மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவருக்கு காப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கழுத்தை அறுத்து கொன்ற கணவருக்கு காப்பு

Added : பிப் 11, 2020
Share

கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள, கங்கோஜிகொத்தூரை சேர்ந்தவர் நடராஜன், 39; கார் ஓட்டுனர்; சென்னையை சேர்ந்தவர் பிரியா, 35; இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பெங்களூருவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு, கோயல், 4, என்ற ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன் நடராஜன் தனது மனைவியுடன் கங்கோஜி கொத்தூரில் குடியேறினார். பிரியா, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தம்பதிக்குள் குடும்ப தகராறு இருந்துள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில், பிரியா கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நடராஜன், பிரியாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நடராஜன், பிரியாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றுள்ளார். இது குறித்து, நேற்று காலை அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., குமார், இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். அதில், பிரியாவை கொன்றதாக நடராஜன் ஒப்புக்கொண்டதால், அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X