சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் நூதனமாக 5 பவுன் நகை 'அபேஸ்'

Added : பிப் 11, 2020
Advertisement

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, நூதன முறையில் மூதாட்டியிடம், ஐந்து பவுன் நகைகளை அபேஸ் செய்த இரண்டு பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி அடுத்த, பூதனூரை சேர்ந்தவர் கமலம்மா, 65. இவர், நேற்று முன்தினம் மாலை, போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பெண்கள், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது, நகை கொள்ளையர்கள் அதிகளவு நடமாடுவதாகவும், நகைகளை கழற்றி பையில் வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர். இதனால் கமலம்மா, தான் அணிந்திருந்த செயின், தோடு, மூக்குத்தி என ஐந்து பவுன் நகைகளை கழற்றி, பேப்பர் ஒன்றில் மடித்துள்ளார். அதை பார்த்த அந்த பெண்கள், 'கொடுங்கள் நாங்கள் பத்திரமாக மடித்து தருகிறோம்,' என, நகைகளை வாங்கி உள்ளனர். பின்னர், இரண்டு பெண்களில் ஒருவர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி உள்ளார். மற்றொரு பெண், நகைகளை தான் கொண்டு வந்த பையில் போட்டுள்ளார். பேப்பரில் கீழே இருந்த கற்களை வைத்து கட்டி, மூதாட்டியிடம் கொடுத்துள்ளார். அதை பெற்ற மூதாட்டி, வீட்டுக்கு வந்து பார்த்த போது, அதில் நகைகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது புகாரின்படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X