சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு விபத்தில் இரண்டு பேர் பலி

Added : பிப் 11, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், உத்தனப்பள்ளி அருகே நடந்த வெவ்வேறு விபத்தில், விவசாயி உட்பட இருவர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தேவர் உளிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 23. இவரது மனைவி பல்லவி, 19. இருவரும், ஹீரோ ஹோண்டா கிளாமர் பைக்கில், நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, தொரப்பள்ளி - ஓசூர் சாலையில் உள்ள ராஜாஜி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த ஹீரோ பேஷன் புரோ பைக், வெங்கடேஷ் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பல்லவி, சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வெங்கடேஷை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.


* ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள, தொட்டமெட்டரையை சேர்ந்தவர் பையாச்சாரி, 70. விவசாயி; இவர், நேற்று முன்தினம் மாலை, 4:45 மணிக்கு, ராயக்கோட்டை - ஓசூர் சாலையில் உள்ள தொட்டமெட்டரை பஸ் நிறுத்தம் அருகே, சாலையை கடக்க முயன்றார். அவ்வழியாக வந்த லாரி, பையாச்சாரி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X