பொது செய்தி

தமிழ்நாடு

கருத்து கணக்கெடுப்பில் சேலத்துக்கு முதலிடம்

Added : பிப் 11, 2020
Advertisement

சேலம்: எளிதான வாழ்க்கை குறித்த கருத்து கணக்கெடுப்பில், தற்போதைய நிலவரப்படி, சேலம் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்திய அளவில், 114 நகரங்களில் எளிதான வாழ்க்கை முறை குறித்த கருத்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நேற்று மாலை வரை, சேலம் மாநகராட்சியில், 10 ஆயிரத்து, 242 பேர், தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் பதிவு செய்த கருத்துகளின் அடிப்படையில், வாழ்க்கை திறன் முறைக்கு, 93 சதவீதம், பொருளாதார திறன் முறைக்கு, 64 சதவீதம், நிலையான வளர்ச்சியில், 100 சதவீதம் என மொத்தம், 92 சதவீதம் பெற்று, இந்திய அளவில் சேலம் மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது. மாநகராட்சி செயல்பாடுகளில், சேவை, நிதி மேம்பாடு, தொழில்நுட்ப செயல்பாடு, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றில், 100 சதவீதம் பெற்று, இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X