சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரிவலம் சென்ற தம்பதியிடம் ஐந்து பவுன் நகை வழிப்பறி

Added : பிப் 11, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலம் சென்ற தம்பதியை தாக்கி, ஐந்து பவுன் நகையை வழிப்பறி செய்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை, வேங்கிகாலை சேர்ந்தவர் மணிவண்ணன், 50; இவரது மனைவி அருணா, 48; இருவரும் நேற்று முன்தினம் இரவு, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர். கிரிவலம் முடித்துவிட்டு, நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, எதிரே பைக்கில் வந்த இருவர், அவர்களை வழி மறித்தனர். பின், அருணாவின் கழுத்திலிருந்த ஐந்து பவுன் நகையை பறித்துக்கொண்டு, இருவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு, தப்பினர். காயமடைந்த இருவரையும், அருகிலிருந்தவர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X