சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் தி.மு.க., நிர்வாகி கொலையில் சரணடைந்த 4 பேர் கோர்ட்டில் ஆஜர்

Added : பிப் 11, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில், தி.மு.க., நிர்வாகி கொலை தொடர்பாக, கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்த நான்கு பேர் நேற்று, ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓசூர், இமாம்படா பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலி, 55. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சிறுபான்மை அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார்; கடந்த, 2 இரவு, ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி., அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நடைபயிற்சி சென்ற அவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. இது தொடர்பாக, ஓசூர், சாந்தி நகரை சேர்ந்த கஜேந்திரன், 32, முதுகானப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார், 22, தளி கொத்தனூர் ராம்நகரை சேர்ந்த கோவிந்தராஜ், 23, மருதாண்டப்பள்ளியை சேர்ந்த யஷ்வந்த்குமார், 24, ஆகிய நான்கு பேர், ஈரோடு மாவட்டம், கொடுமுடி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த, 4ல் சரணடைந்தனர். அவர்களை, கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அவர்கள் நான்கு பேரும், நேற்று பலத்த பாதுகாப்புடன் ஓசூர் ஜே.எம்.எண்-2 நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மீண்டும், இன்று (பிப்.,11) ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனால், சேலம் மத்திய சிறைக்கு, நான்கு பேரும் அழைத்து செல்லப்பட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, நான்கு பேரையும், மூன்று நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X