பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்செட்டி வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டை

Added : பிப் 11, 2020
Advertisement

ஓசூர்: தமிழகம் முழுவதும் வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ளதா என, சிறப்பு அதிவிரைவு படையினர் சோதனை செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்ட வனப்பகுதியில் சோதனை நடத்திய நிலையில், தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் உள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, உரிகம் வனப்பகுதியில் சோதனை நடந்தது. சிறப்பு இலக்கு படை எஸ்.பி., மூர்த்தி தலைமையில், நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும், 150க்கும் மேற்பட்ட, சிறப்பு அதிவிரைவு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள், மூன்று குழுக்களாக பிரிந்து, வனத்துறையினர் உதவியுடன் தீவிர சோதனையில் நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தால், தகவல் தெரிவிக்க, வனப்பகுதி மக்களிடம், சிறப்பு அதிவிரைவு படையினர் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X