தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களின் 2ம் போகத்துக்கு 20 டன் விதை நெல் ரெடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனங்களின் 2ம் போகத்துக்கு 20 டன் விதை நெல் ரெடி

Added : பிப் 11, 2020
Share

கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களின், இரண்டாம் போக சாகுபடிக்காக, கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 20 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இரு பாசனங்களுக்கும், இரண்டாம் போகத்துக்கு, கடந்த, 1 முதல், மே, 31 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நீரை கொண்டு, இரு பாசனங்களிலும், விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இதனால், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், விதை நெல் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.எஸ்.டி., 16 ரகம், கிலோ, 33 ரூபாய், ஏ.டி.டீ., 39 மற்றும் ஏ.டி.டீ., (ஆர்) 45 ரகங்கள் தலா, 38 ரூபாய், பி.பி.டி.,(5204) ரகம் கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரக விதை நெல்கள், 30 கிலோ சிப்பம் எடையில், மொத்தம், 20 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள், தங்களுக்கு தேவையான விதை நெல்லை கேட்டு பெற்றுக்கொள்ள, சங்க நிர்வாகிகள் மற்றும் அதன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X