பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் 110 நாட்களுக்கு பின் நீர்மட்டம் 101 அடிக்கு கீழ் சரிவு

Added : பிப் 11, 2020
Advertisement

பு.புளியம்பட்டி: தொடர்ந்து, 110 நாட்களாக, 101 அடிக்கு மேல் நீடித்த பவானிசாகர் அணை நீர்மட்டம், நேற்று, 100.76 அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த வட கிழக்கு பருவமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 2019 அக்., டிச., மாதங்களில் மூன்று முறை, அணை முழு கொள்ளளவான, 105 அடியை எட்டியது. அதன்பின், கீழ்பவானி மற்றும் அரக்கன் கோட்டை - தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நீர்மட்டம் மெல்ல சரிய தொடங்கியது. டிச., 26 முதல், பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, அணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டதால், நடப்பாண்டில் முதல் முறையாக ஜன.,1ல், பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து, 9 முதல், இரண்டாம் போக பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை, பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால், 110 நாட்களாக அணை நீர்மட்டம், 101 அடிக்கு மேல் நீடித்த நிலையில் நேற்று, 100.76 அடியாக சரிந்தது. நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு, 622 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம், 100.76 அடி, நீர் இருப்பு, 29.3 டி.எம்.சி.,யாக இருந்தது. அரக்கன் கோட்டை - தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்திற்கு, 1,300 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றிலும், கீழ்பவானி வாய்க்காலில், 2,100 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X