வெற்றி பெற்றாலும் ஆம் ஆத்மியின் ஓட்டு சதவீதம் சரிவு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (128)
Share
Advertisement
DelhiPolls2020, DelhiResults, DelhiElectionResults, DelhiElection2020, aamaadmi, voteshare, kejriwal, டில்லிதேர்தல், ஆம்ஆத்மி, கெஜ்ரிவால், ஓட்டு, தொகுதிகள்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில், பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்த போதிலும் கடந்த முறை வாங்கிய தொகுதிகள் மற்றும் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி 54.3 சதவீத ஓட்டுகள் பெற்று, 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் தற்போது வரை அக்கட்சி 51.68 சதவீத ஓட்டுகள் பெற்று 54 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்ததுடன், தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.


latest tamil news




இது தொடர்பாக அரசியல் நிபுணர்கள் கூறுகையில், தேர்தலுக்கு முன் கெஜ்ரிவால், தன்னை ஒரு மென்மையான ஹிந்துத்துவா ஆதரவாளராக காட்டிக் கொண்டார். இதற்காக தன்னை ஹனுமன் பக்தர் எனக்கூறினார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் அவர் அதிகம் பேசவில்லை. பா.ஜ.,விற்கு அதிகளவு ஓட்டுகள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு செயல்பட்டார் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


latest tamil news




ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் கூறுகையில், டில்லியில் மானிய விலையில், தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இலவசமாகவும் குடிநீர் சப்ளை கிடைக்கிறது. பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வரிப்பணம் மக்களுக்கே செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugumaran - chennai,இந்தியா
12-பிப்-202006:47:09 IST Report Abuse
sugumaran காங்கிரஸ் வாங்கின முட்டையை பத்தி எவனும் வாய் திறக்க மறுக்கிறார்கள். பாஜக பொறுத்தவரைக்கும் இந்த தேர்தல் அதன் வாக்கு சதவீதம் கூடியிருக்கு, சிறுபான்மியர்கள் இன்னும் CAA தங்களுக்கு எதிரானது என்று நினைத்து உள்ளனர். பாஜக ஜெயிக்க முடியவில்லையே தவிர தோற்கவில்லை.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-பிப்-202002:36:35 IST Report Abuse
தமிழ்வேல் சங்கிகளா, இலவசத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டுப் போட்டாங்கன்னு சொன்னா , எதனால ஒருலட்சத்தி பதினைந்தாயிரம் பொரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆசைப்பட்டு பாஜகவுக்கு ஓட்டு போடல ?
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
11-பிப்-202021:57:10 IST Report Abuse
Mirthika Sathiamoorthi டாய் நான் sslc ட? நீ 8 வதுடா... அண்ணே நீங்க SSLC பெயிலு நான் 8 வது பாஸ்...பாஸ் பெருசா பெயிலு பெருசா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X