பொது செய்தி

தமிழ்நாடு

உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்க கூட்டம்

Added : பிப் 11, 2020
Advertisement

கரூர்: தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் சங்க, கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம், தலைவர் மகாமுனி தலைமையில், கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு, மாணவ, மாணவியரை அழைத்து செல்லும் செலவை வழங்காத, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட, நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிர் அணி தலைவர் லதா, மாவட்ட செயலாளர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X