பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரயில்வே ஸ்டேஷன் ஜப்தி முயற்சி

Added : பிப் 11, 2020
Advertisement

கரூர்: ரயில்வே திட்டத்துக்கு நிலம் எடுத்த வகையில், கூடுதல் இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில்வே ஸ்டேஷனை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்தனர்.
கரூர் அருகே, பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல், 70. இவருக்கு ஆத்தூர் பகுதியில் இருந்த, 1.5 ஏக்கர் நிலத்தை, கரூர்-சேலம் ரயில்வே திட்டத்துக்கு, 1999ல் தென்னக ரயில்வே எடுத்து கொண்டது. இதற்கு இழப்பீடாக அப்போது, 18 ஆயிரத்து, 950 ரூபாயை, ரயில்வே நிர்வாகம் குழந்தைவேலுவுக்கு வழங்கியது. ஆனால், இழப்பீடு குறைவாக உள்ளதாக கூறி, கூடுதல் இழப்பீடு கேட்டு, கரூர் சார்பு நீதிமன்றத்தில், குழந்தைவேல், 2002ல் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, 'ஒரு கோடியே, எட்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, கரூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தென்னக ரயில்வே கூடுதல் இழப்பீடு வழங்கவில்லை. இதற்கிடையில் குழந்தைவேல் இறந்து விட்டதால், அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த, கரூர் சார்பு நீதிமன்றம், 2016ல் கரூர் ரயில்வே ஸ்டேஷனை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று காலை, குழந்தைவேல் மகன் மணிவேல், கரூர் நீதிமன்ற ஊழியர்கள், ரயில்வே ஸ்டேஷனை ஜப்தி செய்ய வந்தனர். பணியில் இருந்த அதிகாரிகள், ஜப்தி உத்தரவு குறித்து, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள், மணிவேல் ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X