ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 11, 2020 | கருத்துகள் (72)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபைத் தேர்தலf ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.இந்த வெற்றிக்குப் பின்னால் பிரசாந்த் கி ேஷார் இருப்பதாக பேசப்படுகிறது.





இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஆம் ஆத்மிக்குத் தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்துக்கொடுத்த தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர், தனது டுவிட்டர் பதிவில், 'இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டில்லி மக்களுக்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.




இந்த பதிவின் பின்னுாட்டத்தில், 'பிரசாந்த் கி ே ஷாரின் ஆலோசனை தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காரணம். தி.மு.க.,வுடன் பிரசாந்த் கைகோர்த்துள்ளதால், வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றி பெறுவது உறுதி' என, தி.மு.க.,வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




ஆனால், 'என்ன தான் வியூகம் வகுத்தாலும், ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க., ஆட்சியைப் பிடிக்காது. நீங்கள் விஜய்யை தி.மு.க., தலைவர் ஆக்குங்கள். அவர் வெற்றி பெருவார். தி.மு.க., தலைவர் விஜய்' என, விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


தி.மு.க., வாழ்த்து

இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'டில்லியில் மீண்டும், பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை விட, வளர்ச்சி தான் முக்கியம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது,'' என, டுவிட்டரில் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
14-பிப்-202016:25:06 IST Report Abuse
Jaya Ram கிசோர் குமாருக்கு தமிழர்களின் மனநிலை அறியமாட்டார் ஆனானப்பட்ட மோடியே இந்திய முழுமைக்கும் வெற்றிபெற்றும் தமிழகத்தில் மண்ணை கவ்வினார் , முதல்முறை மோடிக்கு இதே கிசோர் தான் ஆலோசகராக இருந்து தேர்தலுக்கு உதவினார், அப்போதும் அவரால் முடியவில்லை தமிழ்நாட்டின் ஆடுகளமே வேறு என்பதை அவர் இந்த தேர்தலுக்கு பின் உணர்ந்து கொள்வார்
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
16-பிப்-202011:53:51 IST Report Abuse
karutthuஅதையும் புரிந்து கொண்டு கிஷோர் செயல்படுவார் ஆனால் யாருக்கு முதல்வர் பதவி ன்னு கொடுப்பினை இருக்கோ அவர் தான் தமிழக முதல்வர் ஆவார்...
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
13-பிப்-202004:28:04 IST Report Abuse
oce இனி வரும் அனைத்து வகை இந்திய தேர்தல்களிலும் எவர் வெற்றி பெற்றாலும் அதற்கு பிரசாந்த் கிஷோர் ஒருவர் தான் பொறுப்பா. நாட்டு மக்கள் என்ன கூ முட்டைகளா.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
12-பிப்-202021:32:47 IST Report Abuse
Aarkay இப்படி ஒரு அற்ப சந்தோஷமா சுடலைக்கு? அவர் இனி என்ன வேஷம் போட்டாலும், ருத்திராட்ச மாலை போட்டு, பட்டை அடித்தாலும் (விபூதியை சொன்னேன்), பெரும்பான்மை மக்கள் அவரை நம்பப்போவதில்லை. இங்கு ஒரு வேஷம் போட்டு, பின்னர் ஹவாலாக்களை திருப்திப்படுத்த கர்ச்சீப் தலையில் கட்டி நோன்புக்கஞ்சி குடித்து, அப்படியே அந்தப்பக்கம் சென்று, பாவாடை கோஷ்டிகளை கோபித்துக்கொள்ளாமல் இருக்க, அல்லேலூயா பாடிவிட்டு, பாவம் என்னதான் செய்வார் சுடலை? ஆயிரம் பிகேக்கள் வந்தாலும், சுடலை தேறுவது கடினமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X