பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 11, 2020
Advertisement

சாலையோரம் குப்பை குவியல்: கரூர் அருகில், அம்மன் நகர் குடியிருப்பு பகுதிகளில், சில நாட்களாக முறையாக குப்பை அள்ளப்படுவதில்லை. இதனால், சாலையோரங்களில் ஆங்காங்கே ஏராளமான குப்பை தேங்கியுள்ளது. சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குப்பையை தினமும் அள்ள வேண்டும்.
மின்கம்பம் சேதம்; மாற்ற கோரிக்கை: கரூர், வடக்கு காந்திகிராமம் அரசு மருத்துவ கல்லூரி அருகில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், பலத்த காற்று வீசும்போது, மின்கம்பம் கீழே விழுந்து விடுமோ என, அச்சம் ஏற்படுகிறது. பள்ளி வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் இச்சாலை வழியாக அதிகம் செல்கின்றன. இதுபோல், பல இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும்.

சின்டெக்ஸ் தொட்டி முட்புதர் ஆக்கிரமிப்பு: கரூர், நரிக்கட்டியூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி, செடி, கொடிகள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன. இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். மற்ற பகுதிகளில் தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளதால், வேறுவழியின்றி முட்செடி களுக்கு இடையே சென்று தண்ணீர் பிடிக்கின்றனர். அங்கு தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சேதமடைந்த பெயர் பலகை: கரூர், பூங்கா நகரில் உள்ள தெருவில், நகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக, அது சேதம் அடைந்துள்ளது. அதை, நகராட்சி அதிகாரிகள் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், புதிதாக செல்கின்றவர்கள் வீதியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால், சேதம் அடைந்த தெரு பலகைளை சரி செய்ய வேண்டும். நகரில், பல இடங்களில் இது போன்ற பெயர் பலகைகளை சீரமைக்க வேண்டியதும் அவசியம்.

கல்லூரி சாலையில் கழிவுநீர் தேக்கம்: கரூர், மருத்துவ கல்லூரி அருகில் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால், வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதுமான சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X