தமிழ்நாடு

பறிபோகும் நகராட்சி இடங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : பிப் 11, 2020
Advertisement

கரூர்: கரூர் நகராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட பல இடங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் காலி இடங்களை மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் போது, குறிப்பிட்ட சதுர அடியை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்த இடத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுதல், மின்வாரிய டிரான்ஸ்பார்மர் அமைத்தல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட அந்த பகுதிகளில் குடியேறும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும். ஆனால், பல உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்களை பெரும்பாலும், அரசு அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. சில சமயங்களில், 'ரிசர்வ் சைட்' பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டாலும், பலத்த கவனிப்புக்காக அதிகாரிகள் சிலர் கண்டு கொள்வதில்லை. இதனால், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில், தான்தோன்றிமலை, இனாம் கரூர் நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த, 20 ஆண்டுகளில் ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பஸ் பாடி கட்டும் தொழில், ஜவுளி தொழில் மற்றும் கொசு வலை உற்பத்தி தொழில்கள் விரிவாக்கத்துக்காகவும், வெளி மாவட்டங்களில் இருந்து குடியேறிய தொழிலாளர்கள் வசதிகளுக்காகவும் அதிகளவில் விவசாய நிலங்கள் பிரிக்கப்பட்டு தொழில் நிறுவனங்களாகவும், வீட்டு மனைகளாவும் மாற்றப்பட்டுள்ளன. அப்போது, கரூர் நகராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தற்போது, ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. கரூர் நகராட்சியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளான இனாம் கரூர், தான்தோன்றிமலை நகராட்சிகள் மற்றும் பழைய சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்தில், மக்களுக்கு தேவையான ஏராளமான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றி, அந்த இடத்தை பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X